சென்னையில் இன்று பெரிய சம்பவம் செய்யப்போகும் கனமழை!… வெதர்மேன் புதிய அப்டேட்!
Rain: சென்னையிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் ரெயின் கோட்டையும் குடையையும் கொண்டு செல்ல மறவாதீர்கள் என வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மே 4 ஆம் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கியது. இது வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான வெப்பம் வாட்டி எடுத்தது. தமிழகத்தில் சேலம், ஈரோடு, கரூர், திருத்தணி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் தமிழகம் குளிர்ந்தது.
அதாவது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. சென்னையில் கூட கடந்த இரண்டு, மூன்று தினங்களாக காலையில் வெயில் குறைந்து காணப்படுகிறது. அந்தவகையில், சென்னையிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் ரெயின் கோட்டையும் குடையையும் கொண்டு செல்ல மறவாதீர்கள் என வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள், சென்னைக்கு நல்ல நாளாக அமைய போகிறது. டெல்டா மாவட்டங்கள், கரூர்- நாமக்கல் பெல்ட், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
Readmore: ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு!! பெண் குழந்தைகளுக்கு அரசின் சூப்பர் திட்டங்கள்!!