For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீவிரம் எடுக்கும் கனமழை..!! 15 மாவட்டங்களுக்கு வார்னிங்..!! இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்..!!

Tamil Nadu is likely to receive heavy rain from today to the 10th, according to the Meteorological Department.
07:22 AM Oct 06, 2024 IST | Chella
தீவிரம் எடுக்கும் கனமழை     15 மாவட்டங்களுக்கு வார்னிங்     இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்
Advertisement

தமிழ்நாட்டில் இன்று முதல் 10ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்றைய தினம் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், கரூர், திருச்சி, தேனி, சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வரும் 10ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் மாத்துாரில் 13 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், புதுச்சேரி திருக்கானுார், ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதிகளில் தலா 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Read More : ஆதார் அட்டையை பயன்படுத்தி வேறொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவது எப்படி..? இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Advertisement