For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Tamil Nadu is likely to experience moderate rain with thunder and lightning for the next 3 hours, according to the Meteorological Department.
11:21 AM Aug 30, 2024 IST | Chella
அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை     வானிலை ஆய்வு மையம் அலர்ட்
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. எனினும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் நீலகிரி, கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Read More : ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை..!! சூப்பர் அறிவிப்பை வெளியிடும் தமிழ்நாடு அரசு..!!

Tags :
Advertisement