கனமழை, வெள்ளம்..!! தமிழக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்றும் இம்மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் காரணமாக தமிழக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ”சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று ஜெய்ப்பூர் செல்லவிருந்த அதிவிரைவு சிறப்பு ரயிலும், டெல்லி செல்ல இருந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டன.
இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு புறப்பட்டு ஹஸ்ரத் நிஜாமுதீன் டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும், காலை 10.10 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத் செல்லும் நவ்ஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலும், மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு பிலாஸ்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது” என ரயில்வே தெரிவித்துள்ளது.
Read More : இந்த கிழமையில் மறந்தும் கூட இந்த தவறை பண்ணிடாதீங்க..!! பெண்களே நோட் பண்ணிக்கோங்க..!!