நாளையும் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
01:51 PM Dec 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement
150 ஆண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்துள்ள பெருமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
நாளை நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குமரிக்கடல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.