கடும் துப்பாக்கிச் சண்டை..!! பாகிஸ்தானின் ராணுவ தளத்தை கைப்பற்றிய தலிபான்கள்..!! பெரும் பரபரப்பு..!!
பாகிஸ்தான் ராணுவ தளத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் படைகளுக்கும், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் போராளிகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான ஆப்கானிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளத்தை தலிபான் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் முகாம்கள் மீது பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தலிபான் போராளிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தனர். கடந்த சில நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் படைகளும், தீவிரவாதிகளும் கோஷ்கர்ஹி, மாதா சங்கர், கோட் ராகா மற்றும் தாரி மெங்கல் உள்ளிட்ட பல பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை குறிவைத்தனர்.
இப்போது, சலார்சாய் இராணுவ தளத்தை கைப்பற்றியது தலிபான்களுக்கு பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ராணுவ தளம் கையகப்படுத்தப்பட்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 48 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு கூறியது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரித்திருந்த நிலையில், தற்போது ராணுவ தளங்களை கைப்பற்றியதன் மூலம் அந்த அச்சுறுத்தலை முறியடித்துள்ளனர்.