சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டை..!! வனப்பகுதியில் பதுங்கியிருந்த 5 நக்சல்கள் சுட்டுக்கொலை..!! தீவிர வேட்டையில் பாதுகாப்புப் படையினர்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பஸ்தார் மண்டலத்திற்கு உட்பட்ட பிஜாப்பூர் மாவட்ட எல்லை வனப்பகுதியில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு மாவட்ட ரிசர்வ் படையினர், மத்திய ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திராவதி தேசிய பூங்கா அருகே வனப்பகுதி ஒன்றில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பின்னர், இருதரப்புக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சல் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய ஏ.கே., 47 ரக துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள், ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். சத்தீஸ்கரில், கடந்த ஆண்டில் மட்டும் நக்சல் அமைப்பைச் சேர்ந்த 219 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் 14 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Read More : தொடர் அட்டூழியம்…! 8 தமிழக மீனவர்கள் கைது… மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!