சிம்லாவில் கடும் பனிமூட்டம்!. மணாலியில் 4 பேர் பலி!. 200க்கும் மேற்பட்ட சாலைகள் மூடல்!.
Heavy fog: இமாச்சல் பிரதேசத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களான சிம்லா மற்றும் மணாலி தற்போது உறைபனி காலம் ஆகும். அங்கு பனிப்பாறைகள் அதிகமாக உள்ளது. இந்த பனிப்பாறைகளை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தின் தலைநகரான சிம்லா மற்றும் மணாலி வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற கோடைவாசல் தலங்களாக இருக்கிறது.
தென்னிந்தியாவில் எப்படி, ஊட்டி, கொடைக்கானலோ, அதுபோல் வட இந்தியாவில் சிம்லா புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. சிம்லாவை பொறுத்தவரை இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா நகரம் என்று சொல்லலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கோடைக்கால தலைநகராகவும் சில காலம் திகழ்ந்தது. பல புகழ் பெற்ற கல்லூரிகள், ராணுவ அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியாகும். இங்குள்ள மலை ரயில் பாதை உலகலப்புகழ் பெற்ற பாரம்பரிய சின்னம் ஆகும்.
பொதுவாக சிம்லாவிற்கும், மணாலிக்கும் எல்லா காலத்திலும் தேனிலவு ஜோடிகள் வருவார்கள். சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதேநேரம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மிக அதிக அளவில் வருவார்கள். ஏனெனில் சிம்லா மற்றும் மணாலியில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் பனி மழை பொழியும் காலம் ஆகும், பனிச்சறுக்கு விளையாட்டுகள் விளையாடவும், ஐஸ் மலையில் நடக்கவும் பலர் விரும்புவார்கள்.
டிசம்பர் ஜனவரியில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய குளிர்காலம் என்பதால், வெப்பநிலை அதிகபட்சம் 8'C இலிருந்து நிமிடம் 0'C வரை இருக்கும். சில சமயம் மைனசில் கூட வெப்பநிலை வந்துவிடும். அந்தவகையில், மணாலி பகுதியில் பனிப்பொழிவு காரணமாக வாகனம் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 மணி நேரத்தில் நான்கு பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். பனிப்பொழிவு சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட குறைந்தது 223 சாலைகள் மாநிலத்தில் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அட்டாரி மற்றும் லே, குலு மாவட்டத்தில் உள்ள சஞ்ச் முதல் ஆட் வரையிலான தேசிய நெடுஞ்சாலைகள், கின்னவுர் மாவட்டத்தில் உள்ள காப் சங்கம் மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கிராம்பூ உள்ளிட்ட சுமார் 223 சாலைகள் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.