For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு..!! நீரில் மூழ்கிய வீடுகள்..!! தவிக்கும் குடும்பம்..!!

The Okanagan Cauvery river has flooded and the houses built on the banks of the river have been submerged.
09:14 AM Aug 02, 2024 IST | Chella
ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு     நீரில் மூழ்கிய வீடுகள்     தவிக்கும் குடும்பம்
Advertisement

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது.

Advertisement

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு நேற்று காலை ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த சூழலில் தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. ஒகேக்கனக்கலில் கடந்த ஒரு வாரமாக தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

ஆற்றின் கரையோரங்களிலும், நீரோடைப் பகுதிகளிலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆற்றின் கரையோரங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், வீடுகள் என பிரம்மாண்ட கட்டிடங்கள் சுமார் 5 முதல் 10 அடி வரை நீரில் மூழ்கியுள்ளது. அந்த வீடுகளுக்குள் பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் சிக்கியுள்ளனர். மேலும் ஆற்றங்கரையோர பகுதியில், விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளும் நீரில் மூழ்கியுள்ளது.

Read More : தூங்கும் போது எப்போதுமே இந்த விஷயத்தை செய்றீங்களா..? இது எந்த அளவுக்கு ஆபத்து..?

Tags :
Advertisement