For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை’..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

04:10 PM Mar 30, 2024 IST | Chella
’ஏப்ரல்  மே மாதங்களில் வெப்ப அலை’     இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Advertisement

ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இதனால் நீர் நிலைகளில் நீரின் அளவு குறைந்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன. மேலும், பகல் நேரத்தில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கம் இரவு நேரங்களிலும் எதிரொலிக்கிறது. இதனால், மின்சாரத்தின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார், சில நாட்களில் டெல்லியில் மிக லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

கோடை காலம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ”அதனை இப்போதே கூறுவது கடினம். ஆனால், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தில், இயல்பை விட அதிகமான வெப்பநிலையை எதிர்கொள்ளும் சூழல். ஏப்ரல் மாதத்தில், நாட்டின் மத்திய பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வெப்ப அலை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நாட்டின் மையப் பகுதியில் நீடிக்கலாம்” என தெரிவித்தார்.

மேலும், அடுத்த நான்கைந்து நாட்களில் கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிசா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காணப்படும் என நரேஷ் குமார் தெரிவித்தார்.

Read More : கல்லூரி மாணவனின் வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.46 கோடி..!! உடனே என்ன செய்தார் தெரியுமா..?

Advertisement