HEAT STROKE | உயிருக்கே ஆபத்தாகும் அபாயம்.!! அறிகுறிகள், வராமல் தடுப்பது எப்படி.?
HEAT STROKE: தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கின்றனர். கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதால் அம்மை வைரஸ் காய்ச்சல் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். இதுபோன்று கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நிலை பாதிப்பு தான் ஹீட் ஸ்ட்ரோக்.
வெயில் காலத்தில் கடுமையான வெப்பத்தின் காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இதனால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. மனித உடலின் சராசரியான வெப்பநிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹிட் ஆகும். கோடை காலத்தில் வெளியில் அதிக நேரம் இருக்கும் போது உடல் நிலை அதிகரித்து 104 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக அதிகரிக்கும். இந்த உயர் வெப்பநிலையை சமாளிக்க முடியாமல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
கடுமையான வெப்பத்தின் காரணமாக உடலானது சில நேரம் வியர்வையை வெளியேற்ற முடியாமல் போகும். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக உயிரிழப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹீட் ஸ்ட்ரோக்(HEAT STROKE) அறிகுறிகள்: உயர் ரத்த அழுத்தம் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் வாந்தி குமட்டல் மயக்கம் வலிப்பு குழப்பமான மனநிலை வேகமாக மூச்சு விடுவது மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் உணர்வில்லாமல் இருப்பது நுரையீரலில் ஏற்படும் சத்தம் அதிக வியர்வை காரணமாக மூச்சுத் திணறல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியவை: நம் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீர் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேறும் நீர் சத்தினை நிரப்ப அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
கடைகளில் கிடைக்கும் கார்பனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் மது ஆகியவை உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். அதிக இறுக்கம் இல்லாத மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். வீட்டில் தயாரிக்கப்படும் ஜூஸ் பருகலாம்.
வீடு முழுவதும் காற்றோட்டத்துடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏசி மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் வெப்பநிலையை கட்டுப்படுத்தலாம். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் கடினமான வேலைகளை தவிர்க்க வேண்டும். அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தவிர்ப்பது ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உதவும்.