மனதை கவரும் தாய்வழி பந்தம்!. குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் தனது குழந்தையை அறிமுகப்படுத்திய கொரில்லா!. வைரல் வீடியோ!.
Gorilla: ஒரு மிருகக்காட்சி சாலையில், கொரில்லாவை பார்க்க குழந்தையுடன் சென்ற இளம் தாய்மாரிடம் தாய் கொரில்லா தனது குழந்தையை அறிமுகப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மனித குழந்தையை பார்த்த கொரில்லா, தன் குழந்தையை அனைவருக்கும் காட்ட முடிவு செய்தது. இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண், தனது குழந்தையை கொரில்லாவிடம் காட்ட கண்ணாடிக்கு அருகில் கொண்டு சென்றார். குழந்தையின் முகத்தை பார்த்ததும், கொரில்லா தாய்வழிப் பாசத்தை வெளிப்படுத்தியது. குழந்தையின் தலைக்கு அருகில் தலை சாய்த்து கண்களை மூடி சைகைகளை செய்தது.
சில நிமிடங்களுக்கு பின், உள்ளே ஓடிய தாய் கொரில்லா, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தது. கண்கள் கூட திறக்காத அந்த குட்டி கொரில்லாவை அந்த பெண்ணிடம் அறிமுகப்படுத்தியது. குட்டி கொரில்லாவின் கைகளை உயர்த்தியும், மார்போடு அணைத்துக்கொண்டு பாசத்தை வெளிப்படுத்தியது தாய் கொரில்லா. மனதை கவரும் இந்த வீடியோவை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.