அம்மாவை பார்க்க முடியல.. மனம் உடைந்து விட்டேன்..!! - ஷேக் ஹசினா மகள் உருக்கம்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாஸேத், நாட்டில் நடந்து வரும் கடினமான கட்டத்தில் தனது தாயை பார்க்க முடியாமல் கட்டிப்பிடிக்க முடியாமல் மனம் உடைந்து போனதாக கூறியுள்ளார். பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மற்றும் நாட்டில் நிலவும் அமைதியின்மை குறித்து அவர் மேலும் வருத்தம் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய இயக்குநரும் ஷேக் ஹசீனாவின் மகளுமான சைமா வாஸெட், தனது எக்ஸ் பக்கத்தில், "நான் விரும்பும் எனது நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மனம் உடைந்துவிட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் என் அம்மாவைப் பார்க்கவோ, கட்டிப்பிடிக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்துவிட்டது" என பதிவிட்டிருந்தார்.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான பிராந்திய இயக்குநராக சைமா வாஸேட் இந்த ஆண்டு பிப்ரவரியில் பொறுப்பேற்றார். இந்த பதவியை வகிக்கும் முதல் பங்களாதேஷ் மற்றும் இரண்டாவது பெண்மணி வாஸேத் ஆவார். ஆகஸ்ட் 5 அன்று அதிகரித்து வரும் போராட்டங்களை அடுத்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்வதால் வங்காளதேசம் ஒரு இக்கட்டான அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்கிறது.
ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிய ஒரு நாள் கழித்து, ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் நாட்டின் பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யூனுஸ் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைவரும் அமைதியாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வகையான வன்முறைகளையும் தவிர்க்கவும். மாணவர்கள், அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பற்ற மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியாய் இருங்கள்" எனக் கூறியிருந்தார். இடைக்கால அரசாங்கத்தில் தற்போது 15 உறுப்பினர்கள் இருக்கலாம் என இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் சுட்டிக்காட்டியுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
Read more ; சூப்பர் தகவல்…! மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்து காப்பீடு…! 3 சதவீதம் வரை வட்டி மானியம்…!