இதய நோய் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.! ஏன் தெரியுமா.!
பொதுவாக காய்கறிகளில் ஊட்டச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் எடுத்து வந்தால் உடலில் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்பதையும், யார் உருளை கிழங்கு சாப்பிட கூடாது என்பதையும் குறித்து பார்க்கலாம்.
பொதுவாக வீடுகளில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு தான் சமையல் செய்வார்கள். ஆனால் உருளைக்கிழங்கு தோலிலும் பல வகையான சத்துக்கள் இருக்கின்றன. உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடும்போது மலச்சிக்கல், புளித்த ஏப்பம் மற்றும் செரிமான பிரச்சனை சரியாகும். சருமம் பொலிவடையும்.
பாலூட்டும் தாய்மார்கள் உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து ஜூஸ் செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
மேலும் நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்து செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உருளை கிழங்கை சாப்பிட்டு வந்தால் நோய் விரைவில் குணமடையும். ஆனால் வாயு தொல்லை மற்றும் இதய நோய் இருப்பவர்கள் உருளை கிழங்கை கண்டிப்பாக சாப்பிட கூடாது. உருளை கிழங்கு சாப்பிடுவது நோயின் பாதிப்பை அதிகப்படுத்தும். இதில் உள்ள அதிகப்படியான மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்து இதய நோய் பாதிப்புகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.