விடிஞ்சா கல்யாணம்.. டிஜே பாட்டுக்கு நடனமாடிய மனமகன்.. கடைசியில் நடந்த விபரீதம்..!! இப்படியா நடக்கனும்..
திருமணம் என்பது ஒவ்வொரு வாழ்க்கையிலும் நடக்கும் மிகவும் முக்கியமான நிகழ்வு ஆகும். உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக திருமண கொண்டாட்டத்தை நாம் காலம் காலமாக நடத்தி வருகிறோம். திருமணத்திற்கு முதல்நாள் ஆடல் பாடல் என்று பல்வேறு கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்படி மகிழ்ச்சியோடு தொடங்கிய திருமணம் விழாவில் இப்படியெல்லாம் நடக்குமா என கேட்கும் வகையில் சோகமாக சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் போஜ்பூர் கிராமத்தில் நவம்பர் 17ஆம் தேதி இரவு திருமணத்திற்கு முந்தைய நாள் நடனமாடிக்கொண்டிருந்த மணமகன் சிவம் (21) மாரடைப்பால் உயிரிழந்தார். இன்று, அவரது திருமண ஊர்வலம் நடைபெற இருந்தது, கடைசியில் அது இறுதி ஊர்வலமாக மாறியது.
போஜ்பூரின் வசிக்கும் சிவம், தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நவம்பர் 17 அன்று, உறவினர்கள் அனைவரும் வீட்டில் கூடியிருந்தனர். மாலையில், திருமண சடங்கு முடிந்ததும், குடும்ப உறுப்பினர்களும் கிராமத்தைச் சேர்ந்த சிலரும் வீட்டில் டிஜேக்கு நடனமாடிக்கொண்டிருந்தனர். சிவமும் நடனம் ஆடி சோர்வாக அமர்ந்து திடீரென தரையில் விழுந்தார்.
குடும்பத்தினர் அவரை முதலில் ஹத்ராஸின் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர், பின்னர் அவரை 10.30 மணிக்கு பாக்லா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். சிவத்தின் தந்தை சாஹேப் சிங் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரசித் மற்றும் சூரஜ் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். அதீத ஒலியால் இம்மரணம் நிகழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Read more ; முன்னாள் படைவீரர்கள் ரூ.1000 செலுத்தி ஆவின் பாலகம் அமைக்கலாம்…!