Heart Attack | மாரடைப்பால் சுருண்டு விழுந்த 8 வயது சிறுமி..!! பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!! அதிர்ச்சி வீடியோ..!!
முந்தைய காலங்களில், மாரடைப்பு நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தற்போது 8 வயது சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத், தல்டேஜ் பகுதியில் ஜாபர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 8 வயதுடைய சிறுமி ஒருவர் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த சிறுமி, வகுப்பறைக்கு செல்லும் வழியில் திடீரென சோர்ந்து அருகில் இருந்த சேரில் அமர்கிறார். பின் ஒருசில நொடிகளில் அவர் மயங்கி விழுகிறார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை மருத்துவர்களும் உறுதி செய்தனர். இதற்கிடையே, சிறுமியின் மரணத்தை குறிப்பிட்டு, எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர், "குஜராத்தில் 3ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உணவு பழக்க முறைகள் மாற்றம் இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், இது அனைவருக்குமான எச்சரிக்கை என்றே நான் பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.