முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமைச்சரின் உதவியாளர் வீட்டில் குவியல் குவியலாக பணம்..!! ரூ.30 கோடியாம்..!! அதிர்ந்துபோன அமலாக்கத்துறை..!!

11:57 AM May 06, 2024 IST | Chella
Advertisement

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் அலாம்கிர் ஆலமின் உதவியாளரின் வேலைக்காரர் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், ரூ.20 முதல் ரூ.30 கோடி ரொக்கப் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் ஆலன். ஜார்க்கண்ட் அரசின் பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் வீரேந்திர ராம் கடந்த பிப்ரவரி மாதம் கைதானார். இந்த வழக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்களும் அடக்கம். இதையடுத்து, இந்த வழக்கில் அமலாக்கத்துறை களமிறங்கியது.

பின்னர், ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் அலாம்கிர் உதவியாளரின் வீட்டு வேலைக்காரர் சஞ்சீவ் லால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், சஞ்சீவ் லால் வீட்டில் குவியல் குவியலாக ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரையிலான பணத்தை குவித்து வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை கண்டறிய ஏராளமான பணம் எண்ணும் மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணமும் எண்ணி முடிக்க பல மணிநேரம் ஆகும் என்பதால், ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கைப்பற்ற பணம் எவ்வளவு என்பது பின்னரே தெரியவரும் என்கின்றன அமலாக்கத்துறை அதிகாரிகள்.

Read More : பிளஸ் 2-வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு..!! கவலைய விடுங்க..!! இந்த தேர்வில் பாஸ் ஆகிறலாம்..!!

Advertisement
Next Article