இந்த லட்டு சாப்பிடுங்க.. எத்தனை வயசானாலும் உங்களுக்கு மூட்டு வலியே வராது...
தற்போது உள்ள உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வலிகள் ஏற்படுகின்றது. குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், கால் பாத வீக்கம், போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆனால் நமது முன்னோர்கள் 90 வயதில் கூட ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவு முறை மட்டும் தான். ஆனால் இன்று உள்ள அவசர காலகட்டத்தில், நம்மால் பாரம்பரிய உணவுகளை தினமும் சமைத்து சாப்பிட இயலாது. இதனால் மாதம் ஒரு முறை, கீழே கொடுக்கப்பட்டுள்ள லட்டுவை செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைத்து விடும். இதனால் நீங்களும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
இதற்கு முதலில், 100 கிராம் முழு கோதுமை, 50 கிராம் வெந்தயம், 50 கிராம் பாதாம் பருப்பு, 25 கிராம் கருப்பு உளுந்து மற்றும் 50 கிராம் கருப்பு எள்ளை தனி தனி பாத்திரத்தில் எடுத்து, நன்கு தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். அனைத்து பொருள்களையும் நன்கு சுத்தம் செய்து விட்டு, பின்னர் காட்டன் துணி ஒன்றில், அனைத்தையும் கொட்டி நான்கு காய வைக்க வேண்டும். இப்போது, வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து லேசாக சூடு படுத்த வேண்டும். லேசாக சூடானதும், அதில் 1 இலவங்கப்பட்டை, தோல் நீக்கிய சுக்கு 1 மற்றும் 1 ஜாதிக்காயை போட்டு வாசனை வரும் வரை வறுத்து விடுங்கள். இப்போது வறுத்த பொருள்களை எல்லாம் ஒரு தட்டில் போட்டு, நன்கு ஆறவைக்க வேண்டும். இப்போது காய வைத்திருக்கும் பொருள்களை எல்லாம், வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்தெடுக்க வேண்டும்.
பிறகு, 2 ஏலக்காயை மிக்ஸியில் போட்டு, அதனுடன் கால் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வறுத்த பொருட்களை எல்லாம் மிக்ஸியில் போட்டு, பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அகலமான பாத்திரம் ஒன்றில், அரைத்த பொடிகளை எல்லாம் கொட்டி வைக்கவும். இப்போது 150 கிராம் வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து, கொதித்த பிறகு, அரைத்த ஏலக்காய் தூளை அதில் சேர்த்து, அதனுடன் அரைத்த இலவங்கப்பட்டை கலவை மற்றும் கோதுமை கலவையை கொட்டி நன்கு கலந்துவிடுங்கள். பொடிகள் அனைத்து வெல்லப் பாகில் கலந்த பிறகு, அடுப்பை அணைத்து விடலாம். பிறகு கையில் சிறிது எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக லட்டு போல் உருட்டி வையுங்கள்.
உருண்டைகள் எல்லாம் நன்கு ஆறிய பிறகு, அனைத்தையும் காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த லட்டுவை தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி, மூட்டு பகுதியில் வீக்கம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.
Read more: கர்ப்பிணிகள் காபி அதிகம் குடித்தால் வரும் பேராபத்து!!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..