For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வால்நட்ஸை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா.?

05:40 AM Dec 14, 2023 IST | 1newsnationuser4
வால்நட்ஸை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா
Advertisement

நட்ஸ் என்று அழைக்கப்படும் உலர் பழங்கள் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கின்றன. இவை நம் உடலுக்கு வலிமையை தருவதோடு பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக செயல்படுகிறது. வால்நட்ஸ் உலர் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு நட்ஸ் வகையாகும். இவற்றில் நல்ல கொழுப்பு புரோட்டின் கார்போஹைட்ரேட் வைட்டமின் சி மற்றும் பி6, மாங்கனிஸ், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நார் சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

வால்நட்ஸ் தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வருவதால் இவற்றில் இருக்கும் பயோட்டின் நம் தலை முடி உதிரும் பிரச்சனையை சரி செய்கிறது. இவற்றின் மூலக்கூறு பித்தப்பையில் இருக்கும் கற்களை குறைக்கும் தன்மை உள்ளது. வால்நட்டை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வர பித்தப்பை கற்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. மேலும் இவை உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதால் தோல் சுருக்கம் மற்றும் இளம் வயதிலேயே தோல் சுருங்கி வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஊற வைத்த வால்நட் சாப்பிட்டு வர நல்ல தூக்கம் கிடைக்கும்.

மேலும் இவற்றில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து நம் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு பயன்படுகிறது. இவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருப்பதோடு உடல் எடை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய புரோட்டின் உடலுக்கு வலிமையை கொடுக்கிறது. வால்நட்ஸ் பொட்டாசியம் சத்துக்களை உள்ளடக்கியது. இது இதை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய நல்ல கொழுப்பு நம் உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவை குறைத்து ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. இந்த உலர் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கிறது.

Tags :
Advertisement