For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தினமும் ஒரு பல் பூண்டினை பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலில் என்ன நடக்கும்.!

05:42 AM Nov 17, 2023 IST | 1Newsnation_Admin
தினமும் ஒரு பல் பூண்டினை பச்சையாக சாப்பிடுவதால் நம் உடலில் என்ன நடக்கும்
Advertisement

நாடுகள் மற்றும் கலாச்சார வேறுபாடு இன்றி அனைத்து சமையலறைகளிலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப்பொருள் பூண்டு. இது உணவின் சுவையை கூட்டுவதோடு பல்வேறு விதமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. இந்த பூண்டினை சமைத்து உண்ணாமல் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

Advertisement

பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி. இது வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இதன் காரணமாக தினமும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற தொந்தரவுகள் உடலை விட்டு நீங்கும். மேலும் இதில் இருக்கக்கூடிய அமிலங்கள் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகின்றன. இது இன்சுலின் சுரப்பதை தூண்டி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.

பூண்டில் அலிசின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. இது தொண்டையில் ஏற்படும் கரகரப்பை போக்குகிறது. மேலும் பூண்டில் உள்ள சாறு பட்டாலே பல் வலி பறந்து போய்விடும். இது வாயு தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறில் இருந்தும் நமது உடலை பாதுகாக்கிறது. இதன் நோய் எதிர்ப்பு சக்தி உடலை எந்த நோய்களும் அண்ட விடாமல் தடுக்கிறது.

தினமும் பச்சை பூண்டு ஒரு பல் சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கக்கூடிய புழுக்கள் வெளியேறுவதோடு செரிமான மண்டலமும் சீராக்கப்படுகிறது. இவற்றில் இருக்கக்கூடிய அமிலத்தன்மை நுரையீரலில் படிந்திருக்கும் சளியை அகற்ற உதவுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் வீரிய தன்மை காரணமாக ரத்தக்குழாய்களில் இருக்கும் கொழுப்புக்களும் வெளியேற்றப்படுகின்றன.

Tags :
Advertisement