தென் மாவட்டங்களில் மட்டுமே விளையும் அதலக்காய் பற்றி கேள்வி பட்டு இருக்கீங்களா.? அரிய வகை காயின் மருத்துவ பண்புகள்.!
தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற காய்களில் ஒன்று அதலைக்காய். இது பாகற்காய் மற்றும் கோவக்காய் வகைகளை சார்ந்த காயாகும். வேலிகள் மற்றும் ஆற்று ஓரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையைச் சார்ந்தது. பேச்சுவாக்கில் அதலக்காய் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காய் ஏராளமான மருத்துவ பலன்களை கொண்ட ஒரு காயாகும் நீரிழிவு நோய் மற்றும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாகவும் வழங்குகிறது.
இந்தக் காய் நம் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் கிடையாது என்பது இதன் தனி சிறப்பாகும். பருவமழை முடியும் காலங்களில் குறிப்பாக மார்கழி மற்றும் கார்த்திகை மாதங்களில் வளரக்கூடிய ஒரு செடியாகும். இது தானாகவே முளைத்து வளரும் ஒரு செடி. இந்தச் செடியில் துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. நீரிழிவு நோய்க்கு இந்த காய் மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தங்களது உணவில் தினமும் இந்த காயை சேர்த்துக் கொள்வதன் மூலம் தீவிர கல்லீரல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதாக மருத்துவங்கள் தெரிவிக்கின்றன. மேலும் உடல் எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ளவர்களுக்கும் இந்த காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. தீவிர உடல் அரிப்பு உள்ளவர்கள் அதலை காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த காய் ஒரு சிறந்த அருமருந்தாகும். இது செரிமான பிரச்சனை மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் இது குடல் புழு பிரச்சனையிலிருந்து காத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. இந்தக் காயையும் பாகற்காயை சமைத்து சாப்பிடுவதைப் போலவே சாப்பிடலாம். இந்த காய் சித்த மருத்துவத்தில் சிறந்த நோய் நிவாரணையாக பயன்படுகிறது.