காலையில் ஃப்ரியா போக சப்போர்ட்டாக இருக்கும் சப்போட்டா.! இவ்வளவு நன்மைகள் இருக்கா உடலுக்கு.?
இனிப்பான சுவை கொண்ட சப்போட்டா பழம் இந்தியா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளில் அதிகமாக விளைகின்ற ஒரு பழமாகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கி இருக்கிறது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டின், வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி5 மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இதை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் பல்வேறு விதமான நன்மைகளையும் தருகிறது. இந்தப் பழத்தின் நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்போட்டா நார்ச்சத்துக்களை அதிகம் கொண்ட ஒரு பழமாகும். இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து செரிமானம் சீராக நடக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. சப்போட்டா பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஜீரணக் கோளாறு நீங்கும். சப்போட்டாவில் ஃபோலேட் கார்போஹைட் சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவை கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவாகும். மேலும் சப்போட்டாவில் எலக்ட்ரோலைட்டுகளும் அதிகம் உள்ளது. இவை கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வை போக்க உதவுகிறது.
சப்போட்டாவில் மக்னீசியம் சத்து நிறைந்திருக்கிறது. இவை ரத்த நாளங்கள் சீராக செயல்பட உதவுகின்றன. மேலும் இவற்றில் இருக்கும் பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இவற்றில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். சப்போட்டாவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது. மேலும் இவற்றில் வைட்டமின் பி5 மற்றும் அதன் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. குறிப்பாக வாய்ப்புற்று நோய் எதிர்ப்பில் சப்போட்டா முக்கிய பங்கு வைக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கார்போஹைட்ரேட் இந்த உடலுக்கு தேவையான சக்தியை வழங்கி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.