ஞாபக மறதியா.? மூலநோயா.? பிரண்டை செடி போதும்.! கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள்.!
பிரண்டை நமது ஊரின் வேலிப் பகுதிகளையொட்டி கொடியாக படர்ந்து வளரும் ஒரு தாவரமாகும். இவற்றின் கீரைகள் மற்றும் காய்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. பிரண்டையில் வைட்டமின் சி, சிட்ரோஸின், அமிரோன் மற்றும் அமைரின் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை கீரைகளாகவும் கிடைக்கிறது. பிரண்டையை உலர வைத்து இடித்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். மேலும் இவற்றை அரைத்து துவையலாகவும் பயன்படுத்தலாம்.
பிரண்டையில் வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் இவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய அமிலங்கள் இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால் இதய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரண்டை ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்தி ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரி செய்கிறது. பிரண்டையின் வேர் எலும்பு முறிவின் போது கட்டு போடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
பிரண்டை துவையலை சாப்பிடுவதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு ஏற்படுகிறது. மேலும் இது ஞாபக சக்தியையும் அதிகப்படுத்துகிறது. மூளை நரம்புகளை பலப்படுத்துவதோடு எலும்புகளின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அஜீரணக் கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. பிரண்டை துவையல் மூல நோய்க்கும் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. சளி மற்றும் கபம் ஆகியவற்றிற்கும் பிரண்டை துவையல் ஒரு சிறந்த மருந்தாகும்.