தலைவலி முதல் மாதவிடாய் வரை.! ஆச்சரியமளிக்கும் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்.!
நமது இந்திய சமையலில் பெருங்காயம் என்பது முக்கியமான ஒன்றாகும். சாம்பார் மற்றும் பல உணவுகளின் தயாரிப்பில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆஸ்துமாவிற்கு சிறந்த தீர்வு கிடைக்கிறது. மேலும் தலைவலி அஜீரணக் கோளாறு மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கும் சிறந்த நிவாரணத்தை தரக்கூடியதாக பெருங்காயம் இருக்கிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் பெருங்காயத்திற்கு என சிறப்பான இடம் இருக்கிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை தொடர்புடைய நோய்கள் குணமடையும் என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் சரியாகி முறையான மாதவிடாய் வருவதற்கும் பெருங்காயம் முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. செரிமான மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கும் பெருங்காயம் பயன்படுகிறது .
மேலும் இவற்றில் இருக்கும் அமிலங்கள் இதயத்தின் ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புகளை நீக்கி இதய நோய் அபாயத்தையும் தவிர்ப்பதாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பெருங்காயம் அஜீரணக் கோளாறு அமிலத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தீராத பல் வலி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் பண்புகளும் பெருங்காயத்தில் இருக்கிறது. மேலும் இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகளுக்கு எதிரான ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.