மீந்து போன சாப்பாட்டை சூடுபடுத்தி சாப்பிடுபவரா நீங்கள்.? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா.?
மனித உடலின் ஆரோக்கியத்திற்கும் இயக்கத்திற்கும் உணவு எமையாக ஒன்றாக இருக்கிறது. நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவின் மூலமாக பெறப்படுகிறது. எனவே நலமுடன் வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவு முறை அவசியம். எனினும் தற்கால அவசர வாழ்க்கையில் கிடைத்த உணவை உண்டு வாழ்வதால் பல்வேறு விதமான நோய்களுக்கும் மனிதன் ஆளாகிறான். பெரும்பாலானவர்கள் எஞ்சிய உணவுகளை மிக்க படுத்தி குளிர்சாதன பெட்டியில் வைத்து சூடு படுத்தி பயன்படுத்துவார்கள். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை இந்த பதிவில் பார்ப்போம்.
மீதம் இருக்கும் உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் சூடு படுத்தி சாப்பிடும் போது அதன் சுவை அதிகரிக்கிறது. மேலும் அவற்றில் இருக்கும் கிருமிகளும் அழிகின்றன. எனினும் இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவை மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் அதில் எந்த சத்துக்களும் இருக்காது. சக்தி இல்லாத உணவை சாப்பிடுவதால் உடலுக்கு கேடு தான். சமைத்த உணவை 3 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கிறது.
எஞ்சிய உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகிறது. இவற்றால் செரிமான பிரச்சனை மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. உணவை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவதால் உணவு விஷம் ஆகும் தன்மையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. குளிர்சாதன பெட்டியில் உணவு இருக்கும் போது 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இருக்கிறது. அதனை எடுத்து சூடு படுத்தும் போது வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உணவில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பெருக வாய்ப்பு உள்ளது. இதனால் ஃபுட் பாய்ஸன் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.