குறைவான கலோரி அதிகமான சத்துக்கள் நிறைந்த புடலங்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா.?
புடலங்காய் நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி ஆகும். மேலும் சைவ விருந்து என்றால் அதில் புடலங்காய் கூட்டு இல்லாமல் இருக்காது. கொடி வகையைச் சார்ந்த புடலங்காயில் வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனிசு, மக்னீசியம், போன்ற மினரல்களும் நிறைந்திருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக காணப்படுகிறது. சுவைக்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டதுதான் புடலங்காய்.
நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு புடலங்காய் ஒரு சிறந்த மருந்தாகும். இது குறைந்த கார்போஹைட்ரேட் சத்துக்களை கொண்டிருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இவற்றில் குறைந்த கலோரியும் அதிகமான நார்ச்சத்துக்களும் உள்ளது. இவற்றை உட்கொள்வதன் மூலம் பசி கட்டுப்படுவதோடு உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வைக்கிறது இவற்றில் இருக்கக்கூடிய அதிகமான நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வைக்கிறது.
புடலங்காய் இயற்கையிலேயே ஆன்டிபயாட்டிக் தன்மை கொண்டது. இவற்றை நாம் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது நமது உடல் கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இவற்றின் அதிகப்படியான நார்ச்சத்து மலக்குடலின் இயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புடலங்காய் ஒரு சிறந்த மலமிலக்கியாகவும் செயல்படுகிறது. புடலங்காய் இலைகளுடன் கொத்தமல்லியை சேர்த்து கொதிக்க வைத்து குளித்து வர மஞ்சள் காமாலை நோய்க்கு நல்ல தீர்வு கிடைக்கும். இவற்றில் கால்சியம், மக்னீசியம் மற்றும் மாங்கனிசு சத்துக்கள் நிறைந்திருப்பதால் நமது எலும்புகளின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.