இந்த விஷயம் தெரிஞ்சா, இனிமேல் பீர்க்கங்காயை சாப்பிடாம இருக்க மாட்டிங்க.! சரும பிரச்சனைக்கு தீர்வு.!
வெள்ளரி குடும்ப வகையைச் சேர்ந்த பீர்க்கங்காய் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காய்கறியில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த காய்கறியில் மட்டுமல்லாது இவற்றின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி5 மற்றும் பி6 நிறைந்திருக்கிறது. மேலும் ரிபோஃப்ளேவின் தயமின் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் புரதச்சத்து கால்சியம் இரும்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து ஆகியவையும் நிறைந்திருக்கின்றன.
பீர்க்கங்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் இவை சிறுநீரக கற்களை கரைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. தினமும் உணவில் பீர்க்கங்காய் சேர்த்துவர சிறுநீரக கற்கள் இருப்பவர்களுக்கு அந்தப் பிரச்சனை சரியாகும். இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலங்கள் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் அஜீரணக் கோளாறையும் சரி செய்கிறது. உடல் எடையை குறைக்க என்னைப்போவர்கள் பீர்க்கங்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மூல நோய்க்கும் பீர்க்கங்காய் ஒரு சிறந்த மருந்தாகும். இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மலக்குடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பீர்க்கங்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர மலக்குடலின் இயக்கம் சீராவதோடு மூல நோய்க்கும் நல்ல தீர்வு கிடைக்கும். இளநரையை போக்குவதற்கு பீர்க்கங்காய் ஒரு சிறந்த மருந்தாகும். இவற்றை சிறுசிறு துண்டுகளாக நெருக்கி வெயிலில் உலர வைத்து பின்னர் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக வதக்கி அதனை பொடி செய்து தடவி வர இளநரை நீங்கும். பீர்க்கங்காயின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை துவையல் செய்து சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் பீர்க்கங்காய் தோல் சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.