உங்களை பாடாய் படுத்தும் சர்க்கரை நோக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ உடனே இந்த அரிசியை வாங்குங்க.. டாக்டர் அட்வைஸ்..
ரேசன் அரிசியை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மாவு அரைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. ரேஷன் அரிசியை சாப்பிடுவது கௌரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது ஒரு சிலர் ரேஷன் அரிசியில் இருக்கும் நன்மைகளை தெரிந்துக் கொண்டு பயன்படுத்த துவங்கிவிட்டனர். எல்லா காலத்திலுமே, ரேஷன் அரிசிக்கு மதிப்பு உள்ளது. இதனால் தான் ரேஷன் அரிசி கடத்தல் இன்றுவரை தமிழகத்தில் நடந்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்டு, வேறு ரூபத்தில் சற்று விலை அதிகமாக சந்தைகளில் விற்கப்படுகிறது.
ரேஷன் அரிசியை சிலர் தவிர்க்க காரணம், அதிலுள்ள வாடைதான்.. அரிசி வாங்கியதுமே, நன்றாக சலித்து அதிலுள்ள தூசு, உமிகளை நீக்கி கொள்ள வேண்டும்.. சமைப்பற்கு முன்பு, ரேஷன் அரிசியை தண்ணீரில் கொதிக்க வைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அரிசியை களைந்தால், அதிலுள்ள வாசனை நீங்கவிடும். அதற்கு பிறகு சமைத்து சாப்பிடலாம். ரேஷன் அரிசி சாப்பாடு மீதமாகிவிட்டால், அடுத்தநாள் வரை தண்ணீர் ஊற்றவில்லை என்றால் கூட தாங்கும். ஆனால், மற்ற வகை அரிசி சாப்பாட்டில் அப்படியில்லை.
மற்ற அரிசிகளை போல், இது சாதாரண அரிசி தான். ஆனால் இதில் சத்துக்கள் சற்று அதிகம். ரேஷன் அரிசி என்பது, அறுவடைக் காலங்களில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால், நேரடியாக விவசாயிகளிடம் இருந்து
நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்பு அந்த நெல்கள், மில்களில் இருந்து புழுங்கள் அரிசியாகக் கொண்டு வரப்படுகிறது. நெல்மணிகளை ஊறவைத்து வேகவைக்கும் போது, அதன் தவுடுகளில் உள்ள சத்துக்கள் அரிசிக்குச் சென்று அது புழுங்கல் அரிசியாக மாறுகிறது. பின்னர், இந்த அரிசிகள் உலர வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நமக்கு ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசிகள், குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் பழமையானதாக இதனால் அந்த அரிசி அடர்த்தியானதாக மாறிவிடும். இதனால், இந்த அரிசியை நம்மால் அதிகம் சாப்பிட முடியாது, பசியும் எடுக்காது. இதனால் உடல் எடையை குறைக்க நினைபவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். மேலும், சர்க்கரை நோயைக் குறைக்க இந்த அரிசி பெரிதும் உதவும். நீரிழிவு நோய் குணமாவதற்கு இந்த ரேஷன் அரிசியைத்தான், நீரிழிவு நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்களாம்.