முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அடேங்கப்பா.." உருளைக்கிழங்கில் இவ்வளவு மருத்துவ நன்மைகள் இருக்கா.! தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

06:02 AM Nov 24, 2023 IST | 1newsnationuser4
Advertisement

உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் மலிவான காய் ஆகும். குறிப்பாக வட இந்தியாவில் உருளைக்கிழங்கு பிரதான உணவு. எப்போதும் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை நாம் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் உருளைக்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

Advertisement

உருளைக்கிழங்கு இந்தக் கிழங்கு நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும். குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். தடமும் விரைவில் மறைந்துவிடும்.

உருளைக்கிழங்கைத் தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். சருமம் பளபளப்பாகும். உருளைக்கிழங்கு காரத்தன்மை நிறைந்தது. எனவே புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு அற்புதமான சிறுநீர்ப்பெருக்கி. இதில் சிறுநீரகத்தை சீராக இயக்கும் சக்தி உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும். வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கும்.இந்தக் கிழங்கு நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை அள்ளித் தரும்.

Tags :
HealthyvegetableMedicinalbenefitspotatoSkincare
Advertisement
Next Article