இனி கறிக்கடைக்கு போகும் போது, ஆட்டின் இந்த பகுதியை கேட்டு வாங்கிட்டு வாங்க; நீண்ட நாள் ஆரோக்கியமா வாழலாம்...
பலருக்கு பிடித்த ஆசைவ உணவுகளில் ஒன்று ஈரல் தான். சமீப காலமாக, பலரும் சிக்கன் மற்றும் மட்டன் ஈரலை சாப்பிட்டு வருகின்றனர். சுவை ஒரு பக்கம் இருந்தாலும், ஈரலில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனால் மருத்துவர்களே ஈரலை சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். ஆம், சிக்கன் ஈரலில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் இரத்த சோகையை ஏற்படாது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ஏ, பி12 மற்றும் ஃபோலேட், கண்பார்வைக்கு மிகவும் நல்லது. அது மட்டும் இல்லாமல், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிகிறது. சமீப காலமாக, பரவி வரும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்க ஈரல் சாப்பிடுவது அவசியம்.
மட்டன் ஈரலில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இதனால், மூளையின் செயல்பாடு நன்றாக இருக்கும் மற்றும் அறிவாற்றல் திறன் கூடும். எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான தாதுக்கள் மட்டன் ஈரலில் உள்ளது. மேலும், இதிலும் இரும்புச் சத்து அதிகம். உடற்பயிற்சி செய்பவர்களுக்குத் தேவையான அனைத்து புரதச்சத்தும் இதில் இருந்து கிடைக்கிறது. ஆட்டிறைச்சி ஈரலில் உள்ள வைட்டமின் ஏ, ஃபோலேட் மற்றும் பிற வைட்டமின்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இது குறித்து பேசிய ஊட்டச்சத்து நிபுணர், கோழி ஈரலை விட மட்டன் ஈரல் தான் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றார். சிக்கன் மற்றும் மட்டன் ஈரல் இரண்டையும் சரிவிகித உணவாக சாப்பிடலாம். ஆனால் இதில், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் என்பதால், இதை அளவாக தான் சாப்பிட வேண்டும். கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று ஈரலை சாப்பிடுவது நல்லது.
Read more: துர்நாற்றம் வீசும் உங்கள் பழைய மெத்தையை புதுசு போல் மாற்ற வேண்டுமா? உடனே இதை செய்யுங்க..