வெளிநாடுகளில் தீவிர ஆய்வு.. அந்த அளவிற்கு முருங்கைக்கீரையில் என்ன இருக்கு தெரியுமா..?
முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் இருந்ததை அறிந்திருப்போம். இப்போது காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் பெரிய நகரங்களில் கிடைப்பதில்லை. தேடி தேடி வாங்கி உண்ணும் அளவிற்கு இதில் என்ன பயன் இருக்கிறது..? ஒன்றா இரண்டா.. சொல்லி கொண்டே போகலாம்.
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கப் முருங்கைக்கீரை சாற்றை குடித்து வரும் போது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தாண்டி உடல் பிரச்சனைகளையும் நீக்குகிறது. சரும பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தி, வலி நிவாரணி என பல்வேறு பயன்களை கொண்டுள்ளது. இந்த முருங்கையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், காப்பர், சோடியம், ஜிங்க், மெக்னீசியம். விட்டமின் ஏ,பி,சி, பீட்டா கரோட்டின், பைபர், புரதம் போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.
முருங்கைக்கீரை உடலின் மந்தத்தன்மையை போக்கி உடல் சூட்டை குறைத்து கண் நோயை குணப்படுத்துகிறது. வாரம் இரண்டு முறையாவது முருங்கைக்கீரை சூப் அல்லது முருங்கைக்கீரை வேகவைத்த நீரை குடித்து வந்தால் ரத்தசோகை பிரச்சனை, மூட்டுவலி, முழங்கால் வலி, எலும்பு வலி, வாதநோய் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். இதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைந்தும் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் காலையில் டீ,காபிக்கு பதில் இதை பருகலாம்.
இதில் நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சனையை நீக்கி, மலச்சிக்கலையும் போக்குறது. குடல் சுத்தம், கல்லீரல், சிறுநீரக சுத்தம் போன்றவற்றிலும் பெரும்பங்கு வகிக்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண் என அனைத்தையும் குணப்படுத்தும் இந்த முருங்கையின் மகத்துவத்தை பற்றி இன்றளவும் வெளிநாடுகளில் ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. நம்மிடம் இருக்கும் இந்த முருங்கையின் மகத்துவத்தை அறிவோம். பயனடைவோம்.
Read more: சர்க்கரை நோயாளிகள் இப்படி தான் இட்லி சாப்பிட வேண்டும்.. டாக்டர் அட்வைஸ்!!