கிச்சனில் இந்த ஒரு பொருள் இருந்தா போதும், இனி மருந்து மாத்திரைக்கு செலவு பண்ணவே வேண்டாம்!!!
இனிப்பான மருந்து ஒன்று உண்டு என்றால் அது வெல்லம் தான். ஆம், வெல்லத்தில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். வெல்லம், இரத்தத்தின் அளவை அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கும். இவ்வளவு ஏன், சில வியாதிகளுக்கு மருந்தை வெல்லத்தைப் பயன்படுத்தி தான் சித்த மருத்துவத்தில் தயாரிக்கிறார்கள். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்பதால், ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு சிறந்த மருந்து.
வெல்லம், நமது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யும். ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு. இதனால் தான் நமது முன்னோர்கள், உணவு சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுவார்கள். பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய் உள்ளவர்கள், வெல்லத்தை பானமாக குடிக்கலாம்.
சர்க்கரை தயாரிக்கும் போது, அதை வெண்மையாக்குவதற்காக சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் அதில் உள்ள இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. ஆனால் வெல்லம் தயாரிக்கும் போது அது போன்ற எந்த இழப்பும் ஏற்படுவதில்லை. அதிகாலையில் வெல்லத்தை சிறிது அளவு சாப்பிட்டால், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரும் குடல் புழுக்களை கட்டுப் படுத்த முடியும். பெண்களுக்கு மாதவிடாயின் போது வெல்லம் சாப்பிட்டால், உடல் சோர்வு, படபடப்பு, தலைசுற்றல் ஆகியவை இருக்காது.