சின்ன வெங்காயம் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
பாரம்பரியமாக நமது உணவில் சேர்க்கப்படும் ஒன்று தான் சின்ன வெங்காயம். ஆனால் தற்போது உள்ள அவசர காலகட்டத்தில் சின்ன வெங்காயம் உரிக்க நேரம் இல்லாததால், பலர் சின்ன வெங்காயத்தை சேர்ப்பதே இல்லை. அதற்க்கு பதில் நேரத்தை மிச்சப்படுத்தும் பெரிய வெங்காயத்தை தான் பயன்படுத்துகிறோம். ஆனால் பெரிய வெங்காயத்தை விட, சின்ன வெங்காயத்தில் தான் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.
ஆம், தொடர்ந்து சின்ன வெங்காயம் சாப்பிடுவதால், உடல் சூடு குறைகிறது. மேலும், சின்ன வெங்காயம் நமது சுவாசக்குழாய்களில் ஏற்படும் சளியை குறைத்து, ஜலதோஷம் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. சின்ன வெங்காயத்தில், காந்தம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இதனால் சின்ன வெங்காயம் சாப்பிடும்போது மன அழுத்தம் குறையும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சின்ன வெங்காயம் சாப்பிடும்போது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சின்ன வெங்காயத்தில், ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் சல்பர் கலவைகள் அதிகம் உள்ளது. இதனால் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்த சுத்திகரிக்கப் படுகிறது. சின்ன வெங்காயத்தில் உள்ள ஃபைபர் மற்றும் வைட்டமின்கள், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள், கட்டாயம் சின்ன வெங்காயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், சின்ன வெங்காயம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
Read more: குட் நியூஸ்… டீ, காபி குடித்தால் இந்த புற்றுநோய் வராது!!! ஆரய்ச்சியில் வெளியான தகவல்..