இந்த ஒரு இலை போதும், தீக்காயமே ஆனாலும் உங்களுக்கு தழும்பு இருக்காது..
பாரம்பரியமாக, பெண்கள் பெரும்பாலும் கையில் மருதாணி வைப்பது உண்டு. ஆனால் தற்போது நாகரீகம் என்ற பெயரில், யாரும் மருதாணி வைப்பது இல்லை. அப்படியே வைத்தாலும், கெமிக்கல் மட்டுமே இருக்கும் கோன் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறு. மருதாணி அழகிற்காக வைப்பது மட்டும் கிடையாது. மாறாக, மருதாணி வைப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆம் உண்மை தான். குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து, தீக்காயம் பட்ட இடத்தில் பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் மற்றும் வலி குறையும். அதுமட்டும் இல்லாமல், மருதாணி தழும்புகள் ஏற்படுவதை தடுக்கும்.
ஒரு சிலருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். அவர்கள் மருதாணி இலையின் சாறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, மருதாணி இலைகளை நன்கு அரைக்கும் போது அதிலிருந்து வரும் ஒரு வகையான எண்ணெயை தோலில் பூசி வந்தால், தோலில் சுருக்கங்கள் நீங்குவது மட்டும் இல்லாமல், மிருதுவாகவும் இருக்கும். மேலும், சொறி சிரங்கிற்கு மருதாணி இலை சாறை விட சிறந்த மருந்து கிடையாது. மேலும், கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற மருதாணி இலைகளை சில மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை குடிக்கலாம்.
மேலும், இந்த தண்ணீரை குடிப்பதால் ரத்த அழுத்தம் குறையும். மேலும், இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிக்கொள்ளாமல் இருக்கும். ஒரு வேலை உங்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், மருதாணி இலை தண்ணீரை பருகி வருவது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு எப்போதும் தலைவலி இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்கள் பல மாத்திரைகள், தைளைங்களை வாங்கி பயன்படுத்துவது உண்டு. ஆனால் நீங்கள் அதற்கு பதில் மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவினால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சனைகளும் தீரும்
குறிப்பாக, ஒரு சிலருக்கு சுளுக்கு மற்றும் வாதம் காரணமாக மூட்டு பகுதிகளில் விறைப்பும், வீக்கமும் இருக்கும். அவர்கள் மருதாணி இலைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயை வீக்கம் உள்ள இடங்களில் தடவி வந்தால் வீக்கம் குணமாகும்.
Read more: ரேஷன் அரிசி கழுவும் போது, இந்த ஒரு பொருளை சேர்த்துக்கோங்க.. இனி வேற அரிசியே வாங்க மாட்டீங்க..