தினமும் 5 காளான் போதும்.. புற்று நோய் முதல் இதய நோய் வரை வராமல் தடுக்க முடியும்...
காளான், பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்று. பொதுவாக, காளான் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, இதய நோய், புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, காளான்களில் உள்ள எர்கோதியோனைன் மற்றும் குளுதாதயோன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் இருக்கும் ‘ஃப்ரீ ரேடிக்கல்களை’ செயலிழக்கச் செய்கிறது. இதனால் வயதான தோற்றம் மற்றும் பிற நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றது. அதனால், நீங்கள் தினமும் 5 காளான் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இந்த காளான்களில், போர்டோபெல்லோ, எனோகி, போர்சினி, சாண்டிரெல்லே, ஸ்டின்கார்ன், பஃப்பால், டங் கேன்னன், ஹேர் ஐஸ் அல்லது ஹைட்னெல்லம் பெக்கி உட்பட 14,000 வகைகள் உள்ளன. இவற்றில் ஒரு சில காளான்களை மட்டுமே நாம் சாப்பிட முடியும், அதே சமயம் ஒரு சில காளான்கள் விஷத் தன்மை கொண்டவை. அவை டெட்லி டாப்பர்லிங், டெஸ்ட்ராயிங் ஏஞ்சல்ஸ், டெத் கேப் மற்றும் ஆட்டுமன் ஸ்கல்கேப் ஆகியவை விஷத் தன்மை கொண்டவை. ப்ரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள காளான்களில், மிகக் குறைந்த அளவு கலோரிகள் தான் உள்ளது.
இதனால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இதை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. காளான்களில் குறைந்த அளவு சோடியம் உள்ளதால், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஏற்றது.
Read more: உங்கள் குழந்தைகள் Genius-ஆக இருக்க வேண்டுமா? அப்போ இந்த மீனை கண்டிப்பா கொடுங்க..