நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா?? அப்போ இந்த காயை அடிக்கடி சாப்பிடுங்க..
பலருக்கு பிடிக்காத காய்களில் ஒன்று என்றால் அது பீட்ரூட் தான். ஆம், பீட்ரூட்டில் இருந்து வரும் ஒரு வகையான வாடை பலருக்கு பிடிக்காது. இதனால் குழந்தைகள் மட்டும் இல்லாமல், பெரியவர்கள் கூட இந்த காயை சாப்பிட மாட்டார்கள். ஆனால் பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆம், பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். பீட்ரூட்டில் நைட்ரேட் அதிக அளவில் உள்ளதால், அது இரத்த நாளங்களில் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. இதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
பீட்ரூட், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துவதால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு கட்டாயம் பீட்ரூட் கொடுக்க வேண்டும். பீட்ரூட்டில், வைட்டமின் C, பொட்டாசியம், வைட்டமின் B9, மற்றும் நார்ச்சத்து போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பீட்ரூட்டில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவும். சருமத்திற்கு பொலிவாக வைத்துக்கொள்ள பீட்ரூட் பெரிதும் உதவும்.
ஒரு வேலை உங்கள் குழந்தைகளுக்கு பீட்ரூட் பொரியல் பிடிக்கவில்லை என்றால், அதற்க்கு பதில் அவர்களுக்கு பீட்ரூட் ரசம், தோசை, ஜூஸ் போன்று செய்து கொடுக்கலாம்..