1௦௦ நோய்களுக்கு ஒரே தீர்வு!! முருங்கையில் ஃபிரைடு ரைஸ் செய்து பாருங்கள்.. உங்கள் குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்..
பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு உணவு என்றால் அது முருங்கை தான். முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதனால் 100 நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது உண்டு. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாகும். இதிலுள்ள கால்சியம், பசும்பாலை விட, 4 மடங்கு அதிகம்.. இப்படி முருங்கையின் நன்மைகளை குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், மற்ற கீரைகளை விட, முருங்கைக்கீரையில் அதிக அளவு இரும்புச் சத்துக்கள் உள்ளது.
மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் மாத்திரை மருந்துகளை மட்டுமே நம்பி இருக்காமல், முருங்கையை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமடையலாம். இந்த கீரையை பெரியவர்கள், சிறியவர்கள், நோயாளிகள் என அனைவரும் சாப்பிடலாம். முருங்கை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. இதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனால் மலக்குடல்களில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும்.
ஒரு வேலை உங்கள் குழந்தைகள் முருங்கை கீரை சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அவர்களுக்கு பிடித்த சுவையில் முருங்கை ஃபிரைடு ரைஸ் செய்து கொடுங்கள். இதற்க்கு முதலில் முருங்கைக்காயை வேக வைத்து, அதிலுள்ள சதையை மட்டும் வழித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது வேக வைத்த பீன்ஸ், முட்டைக்கோஸ், பச்சை பட்டாணியுடன் சேர்த்து, ஃபிரைட் ரைஸ் செய்தால் சுவையாக இருக்கும்.. இதே செய்முறையில் பிரியாணியும் செய்யலாம். இப்படி செய்து கொடுத்தால் கட்டாயம் உங்கள் குழந்தைகள் நோ சொல்ல மாட்டார்கள்..