தினமும் இந்த மஞ்சள் நீர் குடிங்க, கொரோனாவே திரும்ப வந்தாலும் உங்களுக்கு ஒன்னும் ஆகாது!!
பொதுவாக நம் வீட்டில் இருக்கும் மசாலா பொருள்கள் ஒவ்வொன்றிலும் பல மருத்துவ குணங்கள் இருக்கும். ஆனால் அதைப்பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதனால் தான் பலர் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து விடுகின்றனர். குறிப்பாக, நமது பாரம்பரிய மருத்துவத்தில் நீண்டகாலமாக கொண்டாடப்படும் மசாலா பொருள்களில் ஒன்று மஞ்சள் தான். மஞ்சளில், நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான பல நன்மைகள் உள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை எடுத்துக் காட்டுகின்றது. மஞ்சளின் முழு பலனை பெற, ஒரு சில எளிய வழிகளில் உள்ளது. அந்த வகையில், தினமும் காலை வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீரைக் குடிக்கலாம். இப்படி மஞ்சள் தண்ணீரை வழக்கமாக குடித்து வந்தால், நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
மஞ்சள் தண்ணீர், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் மூலம், மஞ்சள் உடலை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மேலும், மஞ்சளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இது மட்டும் இல்லாமல், மஞ்சள் நீர் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
இதனால், வாயு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும், நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் நீரை குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மஞ்சள் நீரை குடித்து வந்தால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஒரு வேலை உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால், இந்த நீரை குடிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒரு முறை சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது.
Read more: சிறுநீரக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த கீரையை வாரம் 2 முறை சாப்பிடுங்க..