For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மூட்டு வலி முதல் புற்று நோய் வரை, இதை விட சிறந்த மருந்து இருக்கவே முடியாது!! ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரை..

health-benefits-of-betel-leaves
04:45 AM Jan 25, 2025 IST | Saranya
மூட்டு வலி முதல் புற்று நோய் வரை  இதை விட சிறந்த மருந்து இருக்கவே முடியாது   ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரை
Advertisement

தமிழகர்களின் கலாச்சாரத்தில், வெற்றிலைக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. நமது முன்னோர்கள் வெற்றிலையை பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று அந்த அற்புத இலையை வைத்து சாமிக்கு பூஜை செய்து விட்டு பின்னர் அந்த வெற்றிலையை தூக்கி போட்டு விடுகிறார்கள். அதில் உள்ள மருத்துவ குணம் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நீங்கள் உண்மையை தெரிந்து கொண்டால், கட்டாயம் இனி ஒரு வெற்றிலையை கூட வீணாக்க மாட்டீர்கள்.

Advertisement

ஆம், வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணி. ஆயுர்வேதத்தில், வெற்றிலையில் இருந்து தைலங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால், உங்கள் வீட்டில் யாருக்காவது காயங்கள், சிராய்ப்பு அல்லது வீக்கம் ஏற்பட்டால், உடனே கண்ட மருந்தை தேட வேண்டாம். வெற்றிலையின் சாறு அல்லது கொழுந்து வெற்றிலையை மையாக அறைந்து வலி உள்ள இடங்களில் தடவினால் போதும். எல்லா வலியும் பறந்து போகும்.

நாலாட்ட மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், மற்றும் எலும்புகளை வலுப்படுத்த வெற்றிலை பத்து, போடுவதுடன், காலையில் 2 வெற்றிலையை நன்கு மென்று சாப்பிடுவதால், வலி தீர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. வெற்றிலையை பொடியாக நறுக்கி, அதை இரவு தண்ணீரில் போட்டுவிட்டு, அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, செரிமான பிரச்சனை எதுவாக இருந்தாலும் குணமாகி விடும்.

மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யாருக்கு நெஞ்சு சளி அதிகமாக இறந்தாலும், வெற்றிலை பத்து போடலாம். அல்லது வெற்றிலை கஷாயம் குடிக்கலாம். இது கட்டாயம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். வெற்றிலையை சாப்பிடுவது புற்றுநோய்க்கு எதிராக போராடும். ஆம், உண்மை தான் இதில் உள்ள பினாலிக் கலவைகள் புற்றுநோய்க்கு எதிராக போராட கூடியவை. அதே சமயம் வெற்றிலையை பாக்கு மற்றும் புகையிலையுடன் எடுத்து கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும். இதனால் வெறும் வெற்றிலையை தான் சாப்பிட வேண்டும்.

Read more: சமையலுக்கு கட்டாயம் இந்த எண்ணெய் பயன்படுத்துங்க.. மருத்துவர் சிவராமன் பகிர்ந்த தகவல்..

Tags :
Advertisement