உடலில் பல நாள் சேர்ந்த கொழுப்பை சட்டுன்னு குறைக்கனும்மா? அப்போ அடிக்கடி இந்த தோசை சாப்பிடுங்க.. உங்களுக்கே வித்யாசம் தெரியும்..
சமீப காலமாக விதவிதமான பெயர்களில் பல வகையான நோய்கள் பரவி வருகிறது. என்ன தான் நோய்களுக்கு மருந்துகள் இருந்தாலும் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டு நமது உடலின் ஆரோக்கியத்தை கெடுத்துவிடக் கூடாது. முடிந்த வரை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டும் தான், நம்மால் இனி வரும் காலங்களில் வாழவே முடியும் என்ற சுழல் உள்ளது.
அந்த வகையில் முழு தானியமான கம்பு, உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும். கம்பில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், கண்பார்வைக்கும், தோல் ஆரோக்கியத்து நல்லது. கம்பில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, வைட்டமின் பி-6 போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. கம்பு சாப்பிட்டால் உடல் வலிமையாகும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அந்தவகையில், கம்பை வைத்து நாம் கஞ்சி, களி, தோசை, இட்லி போன்ற பல உணவுகளை சமைக்கலாம். இந்த பதிவில், நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் தோசை எப்படி சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இதற்க்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கம்பு, 1 கப் இட்லி அரிசி, ¼ கப் உளுந்து மற்றும் ¼ ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவவும். பின் அதில் தண்ணீர் சேர்த்து, 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
இப்போது ஊறவைத்த அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து விடுங்கள். பின்னர் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் மூடி போட்டு வைத்து விடவும். மாவு நன்கு புளித்த பிறகு, வழக்கம் போல் தோசை தவா வைத்து, அரைத்த மாவை ஊற்றி நல்லெண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்தால் சத்தான ருசியான கம்பு தோசை தயார்.
Read more: வாரம் ஒரு முறை ஆட்டுக்குடல் சாப்பிட்டு பாருங்க, உங்களுக்கு எந்த நோயும் வராது!!!