For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கற்றாழையின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

07:22 AM Nov 17, 2023 IST | 1Newsnation_Admin
கற்றாழையின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா  தெரிஞ்சிக்கலாம் வாங்க
Advertisement

உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இந்த ஒரு மூலிகை ஒரு வரப்பிரசாதமாகும். மனிதர்களுக்கு தேவையான 22 அமினோ அமிலங்கள் இதில் உள்ளது.

Advertisement

கற்றாழை இதனுடைய தாவரவியல் பெயர் ஆலோவேரா ஆகும். இளம் பச்சை கருநிற பச்சை போன்ற நிறங்களில் கற்றாழை இருந்தாலும் இதில் முதிர்ந்தவையே அதிக மருத்துவ பயன்கள் அளிப்பவையாக இருக்கிறது.

வைட்டமின் ஏ, இ மற்றும் சி உள்ளது. பொட்டாசியம், கால்சியம், தாமிரம் போன்ற தாது சத்துக்களும் உள்ளது. இதில் உள்ள ஜெல்லை 7 முதல் 10 முறை தண்ணீரில் கழுவிய பின்பு பயன்படுத்த வேண்டும். பல மருத்துவ பயன்களையும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் கற்றாழை மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஜெல், சூரிய ஒளியுடன் கலந்து வரக்கூடிய கடுமையான வெப்பத்தினை ஏற்படுத்துகிற காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து சருமத்தைக் காக்கிறது. அத்துடன் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

ஆறு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பொரித்த வெங்காயம் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனையில் ஏற்படும் வயிற்று வலி குறையும்.

Tags :
Advertisement