இந்த பிரச்சனை இருந்தா 2 கிராம் கிராம்பு போதும்.! இவ்வளவு நன்மைகளா.?
உணவின் வாசத்தை கூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கிராம்பு உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. மேலும் இது பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. கிராம்பில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, மாங்கனிசு, வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளது. இது உடலின் அஜீரணக் கோளாறு கட்டுப்படுத்துவதிலும் உடல் செரிமானத்திலும் பல்வேறு நன்மைகளை புரிகிறது.
அதிகமான மசாலா கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதாலும் மது அருந்தும் பழக்கம் போன்றவற்றால் ஆசிடிட்டி உருவாகும். இதனை சரி செய்வதற்காக நமது உடலில் இருக்கும் பித்தப்பையில் இருந்து பித்த நீர் உணவு குழாயில் அதிகமாக பாயும். இதனால் வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகியவை ஏற்படும்.
இதுபோன்று எரிச்சல் ஏற்படும்போது இரண்டு கிராம்பை மென்று சாப்பிடுவதன் மூலம் இந்த வயிற்று எரிச்சலை கட்டுப்படுத்த முடியும். மேலும் கிராம்பில் இருக்கும் மூலக்கூறுகள் நம் உடலில் சுரக்கும் அதிகமான அமிலத்தன்மையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவை செரிமானத்தை ஊக்குவித்து அமிலத்தன்மையை கட்டுப்படுத்துவதால் ஆசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் தடுக்கப்படுகிறது.
நம் வயிற்றில் ஏற்படும் வாயு தொல்லை அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக கிராம்பு பயன்படுகிறது. இதனை நேரடியாகவும் என்று திண்ணலாம் அல்லது வெந்நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதன் மூலமும் கிராம்பை பயன்படுத்தலாம். தேநீரில் கலந்தும் பயன்படுத்த முடியும். இது வாயு தொல்லை அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுவதோடு வாய் துர்நாற்றம் போன்றவற்றையும் போக்குவதற்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.