For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நூக்கல் காய்: ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்யை தடுக்கும் நூக்கல் காய்.! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.!

05:30 AM Dec 02, 2023 IST | 1newsnationuser4
நூக்கல் காய்  ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்யை தடுக்கும் நூக்கல் காய்   கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
Advertisement

நூக்கல் காய் என்பது ஆங்கிலத்தில் ஜெர்மன் டர்னிப் அழைக்கப்படுகிறது. முட்டைக்கோஸ் குடும்ப வகையைச் சேர்ந்த இந்தச் செடியின் இலை காய் ஆகியவை பல்வேறு மருத்துவ பண்புகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்தக் காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவை நிறைந்திருக்கிறது. மேலும் நார்ச்சத்துக்கள், போலேட், புரதங்கள், மக்னீசியம் போன்ற மினரல்களும் இந்தக் காயில் இருக்கிறது.

Advertisement

இந்தக் காய்களில் இருக்கக்கூடிய தாவர வேதிப் பொருளான குளுக்கோசினேட்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இவை ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் சார்ந்த புற்றுநோய் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. நூக்கல் காய் கண்களின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இவற்றில் இருக்கக்கூடிய லூடின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண்களின் ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தக் காய் கண்புரை ஏற்படுதல் மற்றும் மாடுலார் டீஜெனரேஷன் ஆகியவற்றில் இருந்து நமது கண்களை காக்கிறது.

இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை கொடுக்கிறது. இதனால் நோய் தொற்றுக்கள் ஏற்படுவதில் இருந்து நமது உடல் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் காய் நார்ச்சத்துக்களை அதிகம் கொண்டிருப்பதால் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படவும் உதவுகிறது. மேலும் இந்த காய்களில் கலோரிகள் மிகவும் குறைவு. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

கால்சியம் சத்துக்களை அதிக அளவில் கொண்ட இந்த காய்கறிகள் எலும்புகள் வலுவடைவதற்கு உதவுகின்றன. இவற்றில் இருக்கும் வைட்டமின் ஏ நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கவும் அவற்றின் செயல்பாடுகள் சீராக நடைபெறும் உதவுகிறது. மேலும் இந்த காய்களில் இருக்கும் வைட்டமின் கே இதை ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் இந்த காய்களில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் ஏற்படும் கிருமி தொற்று மற்றும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

Tags :
Advertisement