ஹார்மோன் மாற்றங்களையும் சரி செய்யுமா.? அம்மான் பச்சரிசி இலையின் பயன்கள் என்ன.?
அம்மான் பச்சரிசி இலை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வைக்கக்கூடிய ஒரு செடியாகும். குளிர்ச்சியான இடங்களில் இந்த செடி மழை காலத்தில் பரவலாக வளரக்கூடியது. இந்தச் செடியின் கொடிகள் மற்றும் இலைகளை நறுக்கினால் அவற்றிலிருந்து பால் வரும். இந்தப் பால் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தச் செடி ஹார்மோன் சம நிலையில் ஏற்படும் குறைபாட்டை சரி செய்வதற்கும் சுவாச பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றிற்கும் சிறந்த தீர்வை தருகிறது. இந்த செடியின் கிருமி நாசினி பண்புகள் காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தாக்கி அழிப்பதாக சில சித்த மருத்துவ குறிப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. இதனால் காச நோய் கட்டுப்படுத்துவதாகவும் ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்சிடென்ட்கள் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்ய உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் சிறப்பை கட்டுப்படுத்துவதின் மூலம் ஹார்மோன் சமநிலையை பாதுகாக்கிறது.
இந்த இலைகளின் ஏராளமான மருத்துவ பலன்கள் உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும் தாய்மார்களுக்கு பால் சுரக்க இது சிறந்த மருந்தாகும். இந்தச் செடியின் மலர்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து பால் சேர்த்து அரைத்து பின்னர் பாலில் கலந்து சாப்பிட தாய்ப்பால் நன்றாக சுரக்கும். நார்ச்சத்து நிறைந்து காணப்படும் இந்த இலைகளுடன் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
இந்தச் செடியின் இலைகளை நன்றாக சுத்தம் செய்து அவற்றை நீயுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வயிற்றுப்புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் குணமடையும். இந்த இலைகளின் பால் வைரஸ்களால் தோன்றும் மருக்களுக்கு சிறந்த மருந்தாகும். இந்த செடியின் இலைகளை கிழித்து அவற்றில் இருந்து வடியும் பாலை மருக்கலில் தடவ மறு காணாமல் மறைந்து போகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தவும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இலைகளை அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.