"சரும வறட்சி முதல் நீரழிவு புண்கள் வரை..." இந்த பூக்களில் இவ்வளவு நன்மை இருக்கா.? தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
ஆவாரம் பூ நமது ஊர்களில் சாலை ஓரங்களில் வளர்ந்து இருக்கக்கூடிய ஒரு செடியாகும். இந்த செடியானது ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது. இந்தப் பூ மிகவும் எளிதாக கிடைப்பதால் இதில் இருக்கக்கூடிய மருத்துவ குறிப்புகளை பற்றி பலரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சித்த மருத்துவத்தில் ஆவாரம் பூவுக்கென்று தனி மதிப்பு இருக்கிறது. இந்த ஆவாரம் பூ மற்றும் செடியிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றி பார்ப்போம்.
ஆவாரம் செடியின் இலைகள் மற்றும் பூக்கள் சர்க்கரை நோயாளி ஏற்படுகின்ற புண்களுக்கு சிறந்த மருந்தாகும். ஆவாரம் செடியின் இலைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதன் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு வதக்கி இந்த விழுதை எடுத்து நீரிழிவு நோயாளிகளின் புண்களுக்கு போட்டு வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகியவற்றிற்கு ஆவாரம் பூவின் இதழ்கள் சிறந்த மருந்தாகும். இவற்றின் இதழ்களை காய வைத்து நன்றாக பொடி செய்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இப்படியான இரத்தப்போக்கை கட்டுப்படுத்த 20 கிராம் ஆவரப்பட்டைகளை எடுத்து நன்றாக பொடி செய்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்ச வேண்டும். இதனை 200 மில்லி வரும் வரை சுண்டை காய்ச்ச வேண்டும். நற் இந்த கசாயத்திலிருந்து 50 மில்லி தினமும் காலையில் குடித்து வர அப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும். தோல் அரிப்பு புண்களுக்கு உலர்ந்த ஆவாரம் பூக்களுடன் பச்சை பயிரை சேர்த்து பசை போல காய்ச்சி அதனை அரிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் குணம் கிடைக்கும்.
ஆவாரம் பூக்களுக்கு உடல் சூடு மற்றும் தோல் வறட்சி ஆகியவற்றை சரி செய்யும் தன்மை இருக்கிறது. ஆவாரம் பூக்களை சூரணம் செய்து பால் கலந்து குடித்து வர உடல் சூடு தணியும் மேலும் உடலும் பலம் பெறும். தோல் வறட்சி நீங்கி பளபளப்பாகும். நாவல் மரத்தின் பட்டை, அத்தி பட்டை மற்றும் ஆவாரம் பட்டை இந்த மூன்று பட்டைகளையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தேனில் கலந்து 5-10 நாட்கள் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.