முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமேசானில் ரூ.19,000-க்கு ஹெட்ஃபோன் ஆர்டர்..!! ஆனால், வந்தது என்ன தெரியுமா..? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்..!!

03:00 PM Dec 12, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நம்மில் பலர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இதன் மூலம் நாம் வீட்டை விட்டு வெளியேறாமல் நமக்கு தேவையானதை ஆர்டர் செய்து, ஆஃபர் என்ற பெயரில் மலிவாக பெற்றுக் கொள்கிறோம். எந்த அளவிற்கு ஆன்லைன் ஷாப்பிங் நமக்கு உதவியானதாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில குறைபாடுகளை இருக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் மூலம் செய்யப்படும் ஆர்டர்கள் தாமதாகவும், சிலது தவறாக அல்லது உடைந்து வருவதாக கூறி வருகின்றன. இப்படியான நிகழ்வின்போது பயனர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவர்.

Advertisement

அந்த வகையில் சமீபத்தில், அமேசானில் இருந்து ரூ.19, 000 மதிப்புள்ள சோனி XB910N வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை ஆர்டர் செய்த யாஷ் என்ற நபர் கோல்கேட் ரூத்பேஸ்டை பெற்றதால், அதிர்ச்சியடைத்துள்ளார். மேலும், அமேசான் பார்சலை பிரித்தபோது அவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை அமேசானில் பகிர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “நான் Sony xb910n ஐ ஆர்டர் செய்தேன். அதில் ஹெட்போனுக்கு பதிலாக Colgate lmao கிடைத்தது” என குறிப்பிட்டிருந்தார்.

இவரின் புகாருக்கு உடனடியாக பதிலளித்த அமேசான், “உங்கள் ஆர்டரின் தவறாக அனுப்பப்பட்ட பொருளுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். நேரடியாக உங்களுக்கு மெசேஜ் செய்து தகவலை பெற்றுக்கொள்கிறோம்” என தெரிவித்தனர். ஆன்லைன் ஷாப்பிங்கில் இருந்து வாடிக்கையாளர்கள் தவறாக பொருட்களை பெறுவது இது முதல்முறை அல்ல. இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
அமேசான் நிறுவனம்ட்விட்டர்வாடிக்கையாளர்ஹெட்ஃபோன்
Advertisement
Next Article