அதிர்ச்சி!!! மாணவிகளின் மேலாடையை, ஆண் ஆசிரியர்கள் முன் கழட்ட வைத்த தலைமை ஆசிரியர்...
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 10ஆம் வகுப்பு தேர்வு நிறைவடைந்த நிலையில், அந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் 'பேனா தினத்தை' கொண்டாடியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, மாணவிகள் சக மாணவிகளின் சட்டையில் அவர்களின் பெயரையும், வாசகங்களையும் எழுதியுள்ளனர். இதனை பார்த்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவிஸ்ரீ, கடும் கோவம் அடைந்துள்ளார். இதனால் தங்கள் பள்ளியின் பெயர் பாதிக்கப்படும் என்று கூறி, அவர் மாணவிகளின் சட்டைகளை கழற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
ஆண் ஆசிரியர்கள் முன்னிலையில், பல மாணவிகளின் சட்டைகளை களைய கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் பல மாணவிகள் பள்ளியிலேயே இருந்துள்ளனர். இதனிடையே, தங்களிடம் வேறு சட்டை வைத்திருந்த 20 மாணவிகள் மட்டும், அவர்கள் வைத்திருந்த சட்டையை அணிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும், மற்ற 80 மாணவிகளும் மேல் ஆடை இல்லாமல், பிளேசர்கள் மட்டுமே அணிந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், இந்த சம்பவம் மாணவிகளை மனரீதியாக பாதித்து உள்ளதாகவும், இது மன ரீதியான வன்கொடுமை என்றும் கூறியுள்ளானர். மேலும், இதனால் சில மாணவிகள் அந்த பள்ளிக்கு மீண்டும் செல்வதற்கு பயப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த புகாரையடுத்து, காவல்துறை தரப்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த புகாரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உதவி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.