ஐபிஎல் வரலாற்றில் இவங்கதான் டாப்!… அதிக ஸ்கோர் அடித்த ஐதராபாத்!… மிக நீள மீட்டர் சிக்ஸ் விளாசிய DK!
IPL: ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற தனது முந்தைய சாதனையை (277 ரன்கள்) முறியடித்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் அசுர வேகத்தில் ரன் குவித்தார்.
9 ஃபோர், 8 சிக்ஸ் அடித்த அவர் 39 பந்துகளில் சதம் கடந்தார். பின்னர் அவர் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் கிளாசன் 106 மீட்டர் சிக்ஸ் அடித்தார். அதுவே 2024 ஐபிஎல் தொடரின் மிகப் நீளமான சிக்ஸராக இருந்தது. அடுத்து கிளாசன் அதிரடியை தொடர்ந்தார். அவர் 2 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்த ஐதராபாத் அணி, 287 ரன்கள் குவித்தது.
இதே 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 277 ரன்கள் குவித்து இருந்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதுவே மிக அதிக ஸ்கோர் என்ற சாதனை அப்போது படைக்கப்பட்டது. தனது சாதனையை தானே முறியடித்த சன்ரைசர்ஸ் அணி தற்போது கூடுதலாக 10 ரன்கள் சேர்த்து 287 ரன்கள் குவித்தது புதிய ரெக்கார்டை படைத்துள்ளது.
ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் இதுவே இரண்டாவது பெரிய ஸ்கோர் ஆகும். நேபாள அணி, மங்கோலியா அணிக்கு எதிராக 314 ரன்கள் குவித்ததே டி20 வரலாற்றில் ஒரு அணி எடுத்த மிக அதிக ஸ்கோர் ஆகும். அதற்கு அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோர் ரேட்டை ஏற்றினர். அதன்படி, விராட் கோலி 20 பந்துகளில் 40 ரன்களும், கேப்டன் டூ பிளஸிஸ் 28 பந்துகளில் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய வீரர்கள் சிங்கிள் டிஜிட்டில் வெளியேற, பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வாணவேட்டிக்கையை காட்டினர். சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் பந்தில் தினேஷ் கார்த்திக் 108 மீட்டருக்கு பெரிய சிக்ஸ் அடித்தார். அந்த பந்து மைதானத்தின் கூரையை தொட்டு விட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து விழுந்தது.
இதை அடுத்து ஒரே போட்டியில் மிக நீளமான சிக்ஸர் சாதனையை முறியடித்தார் தினேஷ் கார்த்திக். அவர் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். 5 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்கள் அடித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இறுதிவரை போராடிய பெங்களூரு அணி, 262 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Readmore: நள்ளிரவில் பயங்கரம்!… பாலத்தில் இருந்து கவிழ்ந்த சுற்றுலா பேருந்து!… 5 பேர் பலி!