அலுமினிய ஃபாயிலில் பேக் செய்த உணவை சாப்பிடுவதால் வரும் பெரும் ஆபத்து!!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..
தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் நாம் கடையில் வாங்கும் உணவுகளை தான் சாப்பிட விரும்புகிறோம். அதுவும், கடையில் பார்சல் வங்கி வந்து வீட்டில் வைத்து சாப்பிடுகிறோம். அப்படி நாம் வாங்கும் பார்சலில் பெரும்பாலும் அலுமினிய ஃபாயில் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர், சப்பாத்தி போன்ற உணவுகளை அலுமினியம் ஃபாயிலில் சுற்றி பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு கொடுத்து விடுவது உண்டு. ஆனால் இது முற்றிலும் தவறு. அலுமினிய ஃபாயில் பயன்படுத்துவதால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படும்.
அலுமினியம் தாளில் சூடான உணவு படும் போது, அலுமினிய ஃபாயில் பேப்பரில் உள்ள ரசாயனங்கள் உருகி, உணவில் கலக்கலாம். அந்த உணவை நீங்கள் சாப்பிடும் போது, அந்த இரசாயனங்கள் உங்கள் வயிற்றில் நுழையும். இந்த ரசாயனங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் தீங்கு விளைவிக்கும். அது மட்டும் இல்லாமல், அலுமினியத் தாளில் பேக் செய்த உணவை அடிக்கடி சாப்பிடுவதால், அல்சைமர் போன்ற தீவிரமான மூளை நோய்கள் ஏற்படும்.
இது தவிர, கல்லீரல் பாதிக்கப்படுவதோடு, குடலும் பாதிக்கப்பட்டு, சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் உடலில் சேர்ந்து விடும். மேலும், எலும்புகள் வலுவிழந்து ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அலுமினிய ஃபாயிலில் உள்ள இரசாயனங்கள், சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுத்துவதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கும்.
Read more: மட்டன் பிரியரா நீங்கள்?? மட்டனின் இந்த பகுதியை சாப்பிட்டு, உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்..