மாதுளை ஜூஸ் குடித்தால் ஆபத்தா?? இது தெரியாம இனி குடிக்காதீங்க…
பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழங்களில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் இருதய நோய் வருவதை தடுக்க முடியும். மேலும், பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ளதால் அது நம் உடல் நலத்திற்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும். சிறியவர்கள், பெரியவர்கள், நோய்வாய் பட்டவர்கள் என யார் வேண்டுமானாலும் பழங்களை தாரளமாக சாப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழம் மாதுளைப் பழம் தான். செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் உதவி செய்வது மாதுளை பழம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் மாதுளை பழத்தை பரிந்துரைப்பது உண்டு. ஆனால் நம்மில் பலர் பழத்தை உரித்து சாப்பிடாமல் அதை ஜூஸ் போட்டு குடித்து விடுவோம். மாதுளை ஜூஸ் குடிப்பது நல்லது தான், ஆனால் அதை அதிகம் குடிக்கும் போது பிரச்சனை ஏற்படும்.
ஆம், அளவுக்கு அதிகமாக மாதுளை ஜூஸ் குடிப்பதால் இரத்த அழுத்த அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. மாதுளை ஜூஸ் நாம் அதிகம் குடிக்கும் போது, சருமத்தில் அரிப்பு, அலர்ஜி, சிவத்தல், தடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. சிலருக்கு மாதுளை ஜூஸ் அதிகம் குடிப்பதால், சளி பிடித்தது போன்ற உணர்வு, தொண்டை வறட்சி, மூக்கில் நீர் வடிதல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மாதுளை ஜூஸ் குடிக்கும் சிலருக்கு குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அரிப்பு, வீக்கம், தொண்டையில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மாதுளம்பழம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவினாலும், அதை ஜூஸ் ஆக அதிகம் குடிக்கும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும். அதனால் சர்க்கரை நோயாளிகள், மாதுளை ஜூஸ் அதிகமாக குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
Read More: சந்திரமுகி பட பொம்மியா இது? ஷாக்கில் ரசிகர்கள்… வைரலாகும் புகைப்படம்..